NAATTU MARUTHTHUVAM--நாட்டு வைத்தியம்
Saturday, March 7, 2020
மாதுளம்பழ மகிமைகள்
மாதுளம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் மாதுளம் பூக்களும் பல வித நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது. சளி, இருமல், மூச்சிரைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது மாதுளம் பூ.
இருமல் போக்கும்
மாதுளம் பூ மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும். மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுக்கவும். அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வேளை குடித்து வர உடனடி பலன் கிடைக்கும்.
தொண்டை ரணம்
மாதுளம் பூக்களை மைய அரைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சவும். கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கலக்கி வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண்டைக்குள் மெதுவாக இறக்கவேண்டும். இதனால் தொண்டைக்கமறல், தொண்டையில் ரணம் போன்றவை குணமடையும்.
தாதுபலம்
தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும்.
மாதுளம் பூச்சாறு 300 கிராம், பசுநெய் 200 கிராம் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும். பின் இறக்கி ஆறியபின் அகலமான வாய் உள்ள பாட்டிலில் எடுத்து வைக்கவும். வேளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வரவேண்டும்.
ரத்த மூலம் குணமாக
மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.
ஐந்து மாதுளம் பூக்களை அம்மியில் வைத்து மைய அரைத்து அரை டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலை ஒருவேளை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வர சீத பேதி குணமடையும்.
ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் தரும் பலன்கள்
பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்
ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது
இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.
ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது.
தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக சர்வேயில் தெரிவித்திருந்தனர்.
நிரூபிக்கப்பட்ட
உண்மை
நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த
அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன்
நோய்கள் கல்லீரல், நுரையீரல்நோய், புற்று நோய், பக்க
வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள்,
வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை
தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா
நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக்
கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு
தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை
அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த
அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர்
அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக்
காட்டியுள்ளார்.வலி நிவாரணி
தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. ஒற்றைத்தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.
எப்படி செய்வது ஆயில் புல்லிங்
காலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள்.
விடியற்காலையே சிறந்தது
உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.
நாளொன்றுக்கு மூன்று முறை
எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.
ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது! விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.
இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.
பத்து மிளகு தரும் பலன்கள்
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.
மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம், இரும்பு, பொஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் காணப்படுகின்றன.
இவை அனைத்தும் நரம்புத் தளர்ச்சி, நரம்புக் கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத் தொடர்ந்து செய்து முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: மிளகில் எளிதில் ஆவியாகும் எண்ணெய், ஆல்கலாய்டு, புரதம், கனிமங்கள் உள்ளன. பிபிரைன், பெருபிரைன், பிபிரோனால், கேம்பினி, அஸ்கோர்பிக் அமிலம், கரோட்டின் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளாறு உடனே குணமாகிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது. காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது.
தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும்.
ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். சாதாரண ஜலதோசத்திற்கு காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.
சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும்.
மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.
உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது. அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடமிட நல்ல பலன் கிடைக்கும்
பல்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.
மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் இடித்து கசாயமிட்டு குடித்து வர சகல விஷக்கடிகளும் முறியும். மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்க வைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.
சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.
மிளகு இரசமும், மிளகு சேர்ந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும்.
Subscribe to:
Posts (Atom)